Inandoutcinema - Tamil cinema news

Category: News

தளபதி விஜயா அல்லது ஸ்டாலினா ? உதயநிதியின் அதிரடி பதில் – விவரம் உள்ளே

தமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அனைவருமே தளபதி என்ற அடைமொழியுடன்தான் பொதுமக்களும் மற்றும் அவரது தொண்டர்களும் அழைப்பார்கள். திமுக கூட்டங்களின் அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் என அனைத்திலுமே தளபதி என்றே குறிப்பிட்டு இருக்கும். அதே போல் தமிழ் திரையுலகில் இளைய தளபதி என்ற அடைமொழியுடன் விஜய்யை அழைத்துவந்தார்கள். ஆனால், சமீபகாலமாக பலரும் தளபதி விஜய் என்றே அழைத்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. […]

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் – நடிகர் விஜய் அதிரடி பேச்சு

நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் இறுதியாக பேசிய நடிகர் விஜய் கூறியதாவது : ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு கிடைத்தது […]

இணையத்தில் வைரலாகும் நடிகர் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட தமிழை ஏற்றிடுவோம் பாடல் – விவரம் உள்ளே

தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு உள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அதுகுறித்த கருத்துகளை தொடர்ந்து தெரிவித்துவருவதோடு, தன் ரசிகர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். கடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவர் இசையமைப்பில் உருவான ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு பாடல் வெளியாகி அனைவரையும் முனுமுனுக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. சகாயம் ஐஏஎஸ் வரிகளில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான தமிழ் மொழியை ஏற்றிடுவோம் என்ற பாடல் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாக உள்ளது என முன்பே அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. […]

இணையத்தில் வெளியான காற்றின் மொழி படத்தின் கெளம்பிட்டாலே பாடல் – காணொளி உள்ளே

இந்தியில் வெளியான துமாரி சுலு படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். துமாரி சுலு என்ற படத்தை இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். இப்படத்தில் சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியாக நடித்த வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகிறார். இதனால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துமாரி சுலு படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் `காற்றின் மொழி என்ற […]

பிரபல நடிகருடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர் – விவரம் உள்ளே

இயக்குனராக இருந்து நடிகராக தன்னை வளர்த்துக்கொண்டவர்களில் ஒருவர்தான் எஸ்.ஜே.சூர்யா ஆகும். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாகவும் மிரட்டினார். இதனை தொடர்ந்து விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்ததன் மூலம் பெரும்பான்மை ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். இவர் தற்போது ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். […]

சர்க்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் செய்த சாதனை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் […]

சிவாஜி சிலையை மெரீனாவிற்கு மாற்ற கோரிக்கை வருமென்றால் அதனை அரசு பரிசீலனை செய்யும் – கடம்பூர் ராஜு

நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது : , நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் […]
Page 19 of 93« First...10«1718192021 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news