பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் விவரம் – யாரு டாப்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

அஜித்தின் நடிப்புக்கு சரியானப் படமாக இந்த படம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு அஜித் குமார் இந்த மாதிரியான மாறுபட்ட நடிப்பில் கலக்கியுள்ளார். கிராமத்து இளைஞராக வரும் அஜித் அதிரடியில் மிரட்டுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் ஆகியவை உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான பேட்ட படம், முதல் நாளில் 22 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதே போல் நேற்று உலகம் முழுவதும் வெளியான விஸ்வாசம் படம் விஸ்வாசம் பேட்டையை விட அதிகம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. விசுவாசம் திரைப்படம் 26.7 கோடி வசூலித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும் விடுமுறை தினம் இன்றி, GST கம்மி, சூப்பர் ஸ்டாரோட க்ளாஷ் என பல நெருக்கடி இருந்தும் தமிழ்நாட்ல 26.7கோடி வசூல் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news