Inandoutcinema - Tamil cinema news

கபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும்.

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் சமீபத்தில் வெளிவந்த பத்மாவத் படத்தின் நாயகி தீபிகா படுகோன்னின் மெழுகுச்சிலை லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு நிறுவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியிலுள்ள அருங்காட்சியத்திலும் இச்சிலை உருவாகுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தீபிகா படுகோன் மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் சிலையை வடிவமைப்பது குறித்து கலந்துரையாடி வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது : லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனக்கு மெழுகுச்சிலை நிறுவுவது நினைத்தால் மகிழ்ச்சியாகவுள்ளது. மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் அமர்ந்து உரையாடுவது சிறந்த அனுபவமாகும். சிலை நிறுவப்படும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் எனக் நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news