Inandoutcinema - Tamil cinema news

மோடியை பற்றிய எனது கருத்தை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும் ? – ரம்யா

நடிகையாக இருந்து, பின்னர் அரசியலில் கால்பதித்தவர்தான் நடிகை ரம்யா ஆகும். இவர் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்னிலையில் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளரான திவ்யா ஸ்பந்தனா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த படத்தில் பிரதமர் மோடி அவரது மெழுகுச் சிலையில் நெற்றியில் சோர் (இந்தியில் இந்த வார்த்தை திருடனைக் குறிக்கும்) என்று எழுதுவது போல் உருவகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ட்வீட் தான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையீது ரிஸ்வான் அளித்த புகாரின் பேரில் உ.பி. போலீஸார் திவ்யா ஸ்பந்தனா மீது ஐடி சட்டப்பிரிவு 67, சட்டப்பிரிவு 124-ஏவின் கீழ் தேசத்துரோக வழக்கு ஆகியன பதிவு செய்துள்ளனர். இன்னிலையில், திவ்யா தனது ட்விட்டரில் மீண்டும் #PMChorHai என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டரில், எனக்கு ஆதரவு தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அந்த ட்வீட்டை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்? அடுத்த முறை வேண்டுமானால் நீங்கள் மெச்சும்படி ஒரு ட்வீட்டை பதிவிடுகிறேன்.

இந்தியாவில் தேசதுரோக வழக்கு ரத்து செய்ய வேண்டும். இது அராஜகமானது. மேலும் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தவர்களுக்காக இதை மீண்டும் சொல்கிறேன். #PMChorHai எனப் பதிவிட்டுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news