‘பிகில்’ டீசர் தயாராகிவிட்டதாம்….!!

அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ஏஆர் ரகுமான் இசையமைக்கும் படம் ‘பிகில்’. இப்படத்தின் இசை வெளியீடு நடந்து பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளிவர இன்னும் மூன்றே வாரங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

‘பிகில்’ படத்தின் டீசர் தயாராகி சென்சாரும் வாங்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம். முந்தைய படங்களின் சாதனையை இந்த டீசர் மூலம் முறியடிக்க வைக்க விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டீசர் வெளியான பின் சமூக வலைத்தளங்களில் நிச்சயம் சண்டையை எதிர்பார்க்கலாம். இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்னது போல அது ஒரு எல்லைக்குள் இருக்குமா, அல்லது எல்லை மீறி இருக்குமா என்பது அப்போதுதான் தெரிய வரும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news