தள்ளிபோடப்பட்ட பிக்பாஸ் ரித்விகா திருமணம்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

rythvika marriage stills

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரித்விகா, இவர் ‘பரதேசி’ ‘மெட்ராஸ்’ ‘கபாலி’ ‘டார்ச் லைட்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரித்விகா ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டு திருமணம் நடைபெற போவதாகவும் தகவல் பரவி வருகிறது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒரு பட விழா ஒன்றில் அவர் கூறியதாவது

Rythivika latest stills

“நான் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. எனது திருமணம் அடுத்த ஆண்டுதான் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. திருமணத்துக்கு பின் நடிப்பேனா, நடிக்க மாட்டேனா? என்பதை எனது கணவர்தான் முடிவு செய்வார்” என்று கூறியுள்ளார்.

தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தில் நாயகியாக நடிக்க ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rythivika latest stills

அவரது ரசிகர்கள் திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்துவிடுவாரோ என்ற வருத்தத்தில் உள்ளனர்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news