இனிதே தொடங்கிய ஹர்பஜன் சிங் – லாஸ்லியாவின் ‘Friendship’ ஷூட்டிங்!

முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். “பிரண்ட்ஷிப்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர். ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் லாஸ்லியா , ஹர்பஜன் , அர்ஜுன், காமெடி நடிகர் சதிஷ், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று லாஸ்லியா தனது பிறந்தநாளை ப்ரெண்ட்ஷிப்  படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் நேற்று படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரத்தில் பிரண்ட்ஷிப் குழுவினர் மட்டும் ஷூட்டிங்கை துவங்கி நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news