முன்னணி நடிகரின் மகனுடன் டேட் செய்தாரா பிக் பாஸ் நடிகை…

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள இவன் தான் உத்தமன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமைய்யாவின் மகனான உமாபதி ராமையாவுடன் நடிகை யாஷிகா ஒன்றாக சுற்றி தீரியும் புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், உமாபதி ராமையா அதாகப்பட்டது மகாஜனங்களே, திருமணம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவை அனைத்தும் உமாபதியுடன் யாஷிகா ஆனந்த் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் தான், அதை யாரோ இப்படி கிளப்பிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news