பிறந்தநாளில் சுஜாவருனிக்கு காதலனின் அன்பு பரிசு – விவரம் உள்ளே

சென்னை: அப்புச்சி கிராமம், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை சுஜா வருணி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது சமூத்திரக்கணியின் “ஆண் தேவதை”  படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், சுஜா வருணியும் – நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் கடந்த 11 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வீட்டுக்கு தெரியவந்தபோது இருவீட்டாரும் பேசி அவர்கள் திருமணத்திற்கு சம்பதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை சுஜா வருணியின் பிறந்தநாளான இன்று அவரது காலதன் தங்கள் திருமண தேதியை அறிவித்து அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்; “புதுப்பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது கணவு இன்று நினைவாகியுள்ளது. எங்கள் திருமணம் வரும் நவம்பர் 19ம் தேதி நடக்க இருக்கிறது. இதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு விசித்திர பயணம் 11 ஆண்டுகள் இறுதியில் இது நடக்கிறது. இறப்பு மட்டுமே நம்மை பிரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அவரது காதலியும் வருங்கால மனைவியுமான சுஜா “வெட்கமா இருக்கு அத்தான்” நன்றி அத்தான் என்று அன்பை பொழிந்துள்ளார்.

இவர்கள் திருமணத்திற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news