September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

‘அம்மன் தாயி’ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி!

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘‘அம்மன் தாய்’’. இதில் ஜூலி அம்மனான நடிக்கிறர். புதுமுகம் அன்பு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் வடக்கம்பட்டி என்ற கிராமத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஆந்திராவின் பைரவக்கோனா என்ற இடத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ள நிலையில் படத்தின் தொழில்நுட்ப வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர்கள் கூறியபோது, ‘‘ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். நான் அம்மன் கேரக்டருக்கு செட் ஆவேனா? என்றும் யோசித்தார். ஆனால் போட்டோஷூட் எடுத்து அவரிடம் காட்டியதும் ஆச்சரியப்பட்டுப் போனார். அந்தளவுக்கு அம்மன் கேரக்டருக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருந்தார். அதன்பிறகு படத்தில் அம்மன் வேடத்தில்நடிப்பதற்காக எப்படி விரதமிருப்பது? எப்படி தெய்வங்களை வழிபடுவது ? இந்துக்களின் சாங்கிய, சம்பிரதாயங்கள் என்னென்ன ? என அத்தனையையும் தெரிந்து கொண்டார். அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் ஒரு இந்துவாகவே மாறி முறைப்படி விரதங்கள் இருந்து காட்சிகளில் நடித்துக் கொடுத்தார்.

அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக் கொண்டு தான் நடித்தார். அந்தளவுக்கு அவர் கதையோடும், கேரக்டரோடும் ஒன்றிப்போய் நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார் ” என்கிறார்கள்.

அம்மன் படம் என்பதால் வரும் ஆடி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் – சந்திரஹாசன்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news