பூமி படத்தின் டீசர் வெளியீடு!

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் கடந்த சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ‘பூமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே. டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ரோனித் ராய், சதிஷ், ராதாரவி, சரன்யா பொன்வண்ணன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வளமான கிராமத்துப் பின்னணியில் விவசாயம் குறித்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் மே 1ம் தேதி  உழைப்பாளர் தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகியுள்ளது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news