அயலான் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நடிகர் சிவகார்திகேயன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எஸ்கே பிறந்தநாள் ஸ்பெஷலாக நெல்சன் இயக்கத்தில் அவரை நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியது. 

அதையடுத்து மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என கூறி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சற்றுமுன் தங்களது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.  

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம் வேற்றுகிரக மனிதர்களை கொண்ட வித்யாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  ரகுல் ப்ரீத்  சிங் நடிக்கும் இப்படத்தை 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  அண்மையில் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news