Author: Inanout Cinema

இந்தியன் – 2 கமலின் கடைசி படம் – ஒரு பார்வை

இந்தியன் 2 கமல்ஹாசனின் கடைசி படம். சங்கரின் 14 வது படம். படம் இன்று ஆரம்பிக்கபடுகிறது. இதுவரை நாம் இந்தியன் 2 வை பற்றி கேட்டறிந்தது என்ன? கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. படத்திற்கு இசை அனிருத். […]

இளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்

தயாரிப்பாளர் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் இளையராஜாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையில் இருந்து பெரிய பிரபலங்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். அதற்கு முதற்கட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று பார்த்து அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எனது கடமை என மகிழ்ச்சியுடன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவியாக நடிக்கும் பிரியா வாரியர் – கிளாமரின் உச்சம்

பிரியா வாரியர். கேரள நாட்டை சேர்ந்த இவர் லவ் ஆதர்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர். அவர் நடிக்கும் படம் ஸ்ரீதேவி பங்களா. இந்த படத்தில் அவர் ஸ்ரீதேவியாக நடிக்கிறார். படத்தின் டீசர் பொங்கலன்று வெளியிடப்பட்டது. அதில் ஸ்ரீதேவியின் இளமை காலத்தில் ஸ்ரீதேவி எப்படி வாழ்ந்தார் என்று காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. அதில் அவர் கிளாமராக நடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைரமுத்துவை மீண்டும் வம்பிழுக்கும் சின்மயி – me too

வைரமுத்து சின்மயி பிரச்சனை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் பல பிரச்சனைகளை சந்தித்தார் சின்மயி. இப்பொழுது சில நாட்களாகதான் அதை பற்றி நாம் செய்திகள் எதுவும் கேட்காமல் இருந்தோம். ஆனால் சின்மயி அணைந்த தீயை ஊதி பெருசாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதாவது எம்ஜிஆர் சிவாஜி விருது வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது. அதை பிஆர்ஓ ஸ்டார் வார்ட்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. அதற்கு […]

விஷாலை தொடர்ந்து தன் காதலியை அறிவித்த கிரிக்கெட் வீரர்.

சினிமாவில் இப்பொழுது இருக்கும் ஹாட் டாபிக் விஷால், அனிஷா ரெட்டி திருமணம். நீண்ட சஸ்பென்ஸ்ற்கு பிறகு தன் வருங்கால மனைவி யார் என்பதை போட்டு உடைத்தார் விஷால். அதுபோல நமது இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷபத் பண்ட் தன் காதலி யார் என்பதை போட்டோவாக போட்டு ரசிகர்களுக்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த பக்கத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம் நீ, உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே என் இலட்சியம் எனவும் எழுதியுள்ளார்

நடிகர் பரத்திற்காக வாய்ஸ் கொடுத்த கெளதம் மேனன்

நடிகர் பரத் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர். ஸ்பைடர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அவருக்கென்று தமிழில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் சிம்பா படத்தின் டிரைலர் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. அந்த படத்தின் ட்ரைலர் ஆரம்பத்தில் இயக்குநர் கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்துள்ளார். வெறும் வாய்ஸ் மட்டும் தானா இல்லை படத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.

மில்லியனை தொட்ட விக்ரமின் டீசர் – சாதனை

விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார். படத்தின் டீசர் பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இரண்டு நாட்களில் 4 மில்லியனை தாண்டி டீசரை பார்த்துள்ளனர். இதன் டீசர் அவர் நடித்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் டீசரின் சாதனையை முறியடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம்

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]

மகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது

மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் மஹரிஷி. இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இந்த சங்க்ராந்திக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் பரத் என்னும் நான் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.
Page 52 of 240« First...203040«5051525354 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news