Author: Inanout Cinema

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு திங்கள் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க உறுப்பினர்கள் 10 பேர் தங்களையும் வழக்கில் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக நடிகர் சங்கம் 12ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி அளிக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை […]

விவசாயத்தை ஊக்குவிக்க கார்த்தி நடத்தும் பரிசு போட்டி…

கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து முடித்த பின் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில்  ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பிற்கு நடிகர் சூர்யா முதன் முதலில் நிதியுதவி அளித்து ஊக்குவித்தார்.  விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன். விவசாயிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அமைப்பு மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்” என்று இந்த அமைப்பை […]

20 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்!?

டெஸ்சென்டன்ட்ஸ், க்ரோன் அப்ஸ், க்ரோன் அப்ஸ் 2 ஆகிய டிஸ்னி சேனல் படைப்புக்களில் நடித்தவர் கேமரூன் பாய்ஸ். தனது 10 வயதில் இருந்து நடிக்கத் தொடங்கிய கேமரூன், ஜெஸ்ஸீ என்ற கதாப்பாத்திரத்தில் புகழ்பெற்றவர். தாகத் திட்டம் என்ற பெயரில் நீர் இல்லாத ஊர்களுக்கு உதவ நிதி திரட்டும் பொருட்டு இன்ஸடாகிராம் பக்கம் தொடங்கிய கேமரூனுக்கு ஒரு கோடிக்கும் அதிக பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கேமரூன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரவில் உறங்கும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும் […]

‘யுத்தமயமான இந்த உலகத்தில் இன்று முத்த தினம்’-நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் எந்த மேடையேறினாலும் தன் பேச்சால் கலகலப்பை உண்டாக்கி கவனத்தை ஈர்ப்பவர். இன்று அவர் ‘ஆடை’ படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். எடுத்தவுடனேயே தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன் பேச்சைத் தொடங்கினார். இன்னைக்கு காலையில ஒரு கணவர் தன் மனைவிகிட்ட விளையாட்டா சொல்றார், “நான் என் சம்பளம் இருபதாயிரம் ரூபாய்க்கு பதிலாக இருபதாயிரம் முத்தங்கள் தரேன். நீ அதை வச்சு குடும்பத்தை நடத்து” என்று. உடனே அந்த மனைவி, “அதுக்கென்னங்க, நல்லதுதான். நீங்க […]

பிகில் இன்று மாலை விஜய் பட அறிவிப்பு;

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். நயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி […]

தண்ணீர் தட்டுப்பாட்டை பாடலில் சுட்டிக்காட்டும் நடிகர் சூர்யா!!

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் காப்பான். சூர்யாவுடன், மோகன் லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  மோகன் லால் இந்திய பிரதமராகவும் அவருக்கு பாதுகாப்புளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இடம்பெற்றுள்ள சிறுக்கி என்ற கிராமத்து பாடம் தற்போது வெளியாகியுள்ளது.  அதில் தண்ணீர் தட்டுப்பாட்டையும், காவேரி பிரச்சனையும் இணைத்து எழுதப்பட்டுள்ள பாடல்வரிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்

கங்கனா நடிப்பில் உருவாகி உள்ள ஜட்ஜ்மெண்டல் ஹை கியா திரைப்படத்தின் பாடல் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கங்கனா, அவரிடம் தனது மணிகர்னிகா படத்திற்கு ஏன் எதிர்மறையான விமர்சனத்தை கூறினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தேசியத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுத்ததால் தன்னை அந்த செய்தியாளர் மூர்க்கதனமான பெண் என குறிப்பிட்டதாகவும் கங்கனா குற்றம்சாட்டினார். இதனை மறுத்த அந்த செய்தியாளர், கங்கனா […]

’83’படத்தின் முதல் பார்வை !!

பத்மாவத், சிம்பா, கல்லி பாய் என தொடர் வெற்றிகளை பெற்ற நடிகர் ரன்வீர் சிங். தற்போது ’83 ‘ம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை பற்றி உருவாகும் படம் ஆகும். இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்ட கபில்தேவின் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ஏற்று  இதில் நடிக்கிறார். மற்ற வீரர்களின் கதாபாத்திரத்தை ஏற்று பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தை தமிழக நடிகர் ஜீவா நடிக்கிறார் […]

பூஜையுடன் துவங்கியது அருண் விஜய், கார்த்திக் நரேன், கூட்டணியில் உருவாகும் மாஃபியா

தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், எல்லைக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இது ஒரு அற்புதமான தருணம். மிக திறமையான இரண்டு ஆளுமைகள் இணைவதை பற்றிய செய்தி தான் இது. ஆம், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க “மாஃபியா” படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தூண்டியுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அது விடாமுயற்சி, தூண்டுதல் மற்றும் துல்லியத்தன்மை பற்றியது. குறிப்பாக, லைகா […]

“யு” சான்றிதழ் “விருது”

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சீனிவாசன். சண்டைப்பயிற்சி – “க்னாக் அவுட்” நந்தா. எடிட்டிங் – துர்காஸ். நடனம் – சர்வஜித், பாடல்கள் – ஆதவன் மற்றும் NTC.சரவணன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் […]
Page 5 of 345« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news