Author: Inanout Cinema

மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சித் ஸ்ரீராம்!

பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் தற்போது இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. இதனிடையே, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வானம் கொட்டட்டும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. படைவீரன் என்ற படத்தை இயக்கிய தனா என்பவர்தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக ’96’ படத்தின் இசையமைப்பாளர் […]

ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!!

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில், உருவான ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படம் சாதிய ரீதியிலான மோதல்களை தூண்டி விடும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் உண்மையாக நடந்த சம்பவத்தில் கற்பனைக் கதைகளை சேர்த்து இட்டுக்கட்டி படமாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்திய பிராமன் சமாஜ் இயக்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் உரிய அதிகாரியை […]

IND vs NZ: இறுதிப் போட்டியில் நுழையப் போவது யார்?

இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் முதல் அரை இறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்தும் மோதுகின்றன. இந்தப் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலக்கோப்பைத் தொடரில் நியுசிலாந்து அரை இறுதிக்குள் நுழைவது இது எட்டாவது முறையாகும். இதில் கடந்த முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியுற்று கோப்பையை தவற விட்டது. […]

‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா

அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த்,ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். […]

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி […]

இனியாவின் பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா..!

தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா. அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன. கடந்த வருடம் […]

தமிழாற்றுப்படை நூலை வெளியிடும் திமுக தலைவர்

தான் எழுதியுள்ள தமிழாற்றுப்படை நூலை, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வருகிற 12ஆம் தேதி தன்னுடைய தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் அந்நூலை வெளியிடவுள்ளதாகவும், ஒலிநூலை வைகோ வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தான் எழுதிய 17 நூல்களை கலைஞர் கருணாநிதி வெளியிட்டதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.

பிகில் படத்தின் வெறித்தனம் பாடலை பாடிய தளபதி விஜய்!

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 3ஆவது முறையாக இயக்குனர் அட்லி உடன் இணைந்து விஜய் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்தரா, ரெபா மோனிகா ஜான், யோகி பாபு, ஜாக்கி ஷரூப், இந்துஜா, வர்ஷா போலம்மா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் தளபதி […]
Page 4 of 345« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news