Author: Inanout Cinema

ரஜினி கடைசி படம்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள தர்பார் படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. தற்போது, சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில், ரஜினி நடிக்கிறார். இதுவே, ரஜினியின் கடைசி படம் என்றும், அதன்பின், முழு நேர அரசியலுக்கு வருவார் என்றும், ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், இதற்கும் அடுத்தபடியாக ஒரு படத்தில் நடிக்க, ரஜினி முடிவு செய்துள்ளதாக, ஒரு தகவல் உலவுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட மூன்று இயக்குனர்களிடம், இதற்காக கதை கேட்டுள்ள ரஜினி, மூவரில் […]

சிருஷ்டி டாங்கே கவர்ச்சி போட்டோ ஷுட்!!

மெகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஷ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி […]

சிவகார்த்திகேயனின் ஹீரோ: புதிய அப்டேட்

நம்ம வீட்டுப்பிள்ளை படத்தை அடுத்த மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‛ஹீரோ’. அவருடன் அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றன. கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நவம்பர் 7 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கதை திருட்டு சர்ச்சை – அட்லி மீது போலீசில் புகார்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் செல்வா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அட்லி, “நான் பார்க்கும் எல்லா படங்களுமே என்னை கவர்கின்றன. பிகில் படத்தின் கதை என்னுடையது” என்றார். இந்த நிலையில் பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குனர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி போலீசில் புகார் அளித்துள்ளார். […]

அஜித், விஜய் பட நடிகை வீடுகளில் ரெய்டு!!?

அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயது, விஜய்யின் லவ்டுடே உள்பட பல படங்களில் நடித்தவர் மந்த்ரா. திருமணத்திற்கு பிறகு கேரக்டர்கள் ரோல்களில் நடித்து வந்த மந்த்ரா, உடல் எடை குறைப்பு சம்பந்தப் பட்ட பயிற்சி கொடுக்கும் கலர்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த கலர்ஸ் நிறுவனம் மந்த்ராவின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, ஆந்திராவில் செயல்பட்டு வரும் இந்த கலர்ஸ் நிறுவனத்தில் சமீபத்தில் வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது […]

சாய் பல்லவி புது பட டைட்டில்!

சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் புதிய படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். கல்லூரி காதலர்கள் சந்திக்கும் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு எரிச் செகல் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1970ல் எழுதிய லவ் ஸ்டோரி என்ற நாவலின் தலைப்பை வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் சேகர் கம்முலா. கிட்டத்தட்ட அந்த நாவலில் இடம்பெற்ற காதலர்களைப்போலவே இந்த படத்தின் காதலர்களும் பல போராட்டங்களை சந்திக்கிறார்களாம். அதனால் […]

சிக்கலில் ஜெ. பயோபிக் படங்கள்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் பிரியதர்ஷினி இயக்கத்தில் த அயர்ன் லேடி என்ற பெயரிலும் ஜெ. பயோபிக் படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடிக்கிறார். மேலும், கெளதம்மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை வைத்து குயின் என்ற வெப் சீரிஸ் இயக்குகிறார். […]

விஜய் 64: 40 நாள் டில்லியில் முகாம்

இன்னும் தலைப்பு வைக்கப்படாத விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார். விஜய்யுடன் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதன் படப்படிப்புகள் கடந்த சில நாட்களாக டில்லியில் நடந்து வந்தது. முதலில் விஜய் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் […]

வனிதாவை வாயிலேயே அடித்த சாண்டி!!

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடிகை வனிதாவை கட்டி வைத்து, சாண்டி உருட்டுக்கட்டையால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசன் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில், பிக் பாஸ் கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாட்ஷா ரஜினி கெட்டப்பில் இருக்கும் சாண்டி, வனிதாவை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து உருட்டுக்கட்டையால் அடிக்கிறார். அப்போது பேசுவியா, பேசுவியா என […]

அஞ்சலியின் புதிய அவதாரம்!!

பாகமதி’ படத்திற்கு பின் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் படம் ‛நிசப்தம்’. மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். சஸ்பென்ஸ் திரில்லர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் அனுஷ்கா, மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். ஹேமந்த மதுகர் இயக்குகிறார். மகா என்ற கதாபாத்திரத்தில் குற்ற புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி நடிக்கிறார். இவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
Page 30 of 433« First...1020«2829303132 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news