Author: Inanout Cinema

வசூலில் சாதனை படைத்த ‘தி லயன் கிங்’..

நேற்று 19ஆம் தேதி இந்தியாவில்  ‘தி லயன் கிங்’ படம் வெளியாகிறது. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ஹிந்தி மொழியில் ஷாருக்கானும், அவரது மகனும் டப்பிங் பேசுகிறார்கள். அதுபோல தமிழிலும் முன்னணி நடிகர்களான சித்தார்த், அரவிந்த்சாமி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசுகிறார்கள். நேற்று இந்தியாவில் இப்படம் வெளியான நிலையில் தமிழ் டப்பிங் மிக அருமையாக இருந்ததாக தெரிவித்து […]

‘தும்பா’ குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி !!

சில சந்தோஷங்கள் விவரிக்க முடியாதவை, அவற்றை வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. அப்படி ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான் தும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்திருக்கிறது. வணிகரீதியான வெற்றி மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல், பார்வையாளர்களிடமிருந்தும், குறிப்பாக குழந்தைகளிடமிருந்தும் பெரும் பாராட்டுக்களை ‘தும்பா’ பெற்றதே இதற்கு காரணம்.  இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, “தும்பாவுக்கான அருமையான வரவேற்பை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது சென்னையில் மட்டுமல்லாமல், மற்ற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கூட மிகப்பெரிய […]

ஐசிசி அறிவித்துள்ள புதிய விதி… தப்பித்த கேப்டன்கள்…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிகளில் ஐசிசி அமைப்பு தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ஒரு போட்டியில், ஒரு அணி தாமதமாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் இவ்வாறு நிகழ்ந்தால், அந்த அணியின் கேப்டன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது ஐசிசி இந்த விதியை மாற்றியுள்ளது. தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் இனி ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி இனி […]

பிரச்சனைகளுக்கு முடிவுகட்டி களம் இறங்க காத்திருக்கும் நயன்தாரா படம்…

நயன்தாரா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உருவாகி ரிலீஸாக தாமதமாகி வரும் படம் கொலையுதிர் காலம். இந்த படத்தை உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகினார். இவர் இந்த படத்திலிருந்து விலகினார் என்பது இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போதுதான் பலருக்கு தெரியவரும். அதை அவரே ட்விட்டரில் தெரிவித்தார். இந்த படத்தில் […]

அருணாச்சல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. !!

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றுள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், கிழக்கு காமேங் மாவட்டத்தில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் இட்டாநகர், அசாம் மாநிலம் கவுகாத்தி, நாகாலந்து மாநிலம் […]

இயக்குநர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கானத் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரிய வழக்குத் தள்ளுபடி!!

இயக்குநர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 21ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான, வழக்கறிஞர் செந்தில்நாதன் அறிவித்தார். இந்நிலையில், தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி, இயக்குநர் ஜெகநாத் என்கிற கே.பி.ஜெகன் தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் கடந்த 17ஆம் தேதி மனு அளித்தார். தனது மனுவை பரிசீலித்து, தேர்தல் அதிகாரியை மாற்ற தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, […]

தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முன்னணி வேடத்தில் தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’ பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறது. ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது. நயன்தாராவை தொடர்ந்து […]

மிஷன் மங்கல்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு! !

செவ்வாய் கோளுக்கு 2013ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மங்கல்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகைகளான நித்யா மேனன், வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, கிரித்தி குல்ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ஜகன் சக்தி இயக்கி உள்ளார். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மிஷன் மங்கல் திரைப்படம் வெளியாக உள்ளது.
Page 2 of 350«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news