Author: Inanout Cinema

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை!!

சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. உதகையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேங்கிக்கால், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் மிதமான […]

சிறுபான்மையினருக்கு ஆதரவாக 49 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம்…

இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை ஏற்க வேண்டும். இந்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் இசுலாமிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் வார்த்தைக்காகவும், பசுவுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விஷயம். 2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில்  கிட்டத்தட்ட 254 […]

ஆகஸ்ட் 20ல் சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையாளம்!?

நிலவின் தென் பகுதியில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான் 2 விண்கலம் கடந்த திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புவி வட்டப்பாதையில் 230 கிலோ மீட்டர் விட்டத்தில் 45 ஆயிரத்து 163 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வரும் 26 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புவி வட்டப் பாதையில் சுற்றி […]

தயாரிப்பாளராக அறிமுகமாகி அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குநர்…

காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடிப் பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். சில தினங்களுக்கு முன்பு தான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ‘ஓபன் விண்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள தன் நிறுவனத்தின் மூலம் படங்கள், வெப் சிரீஸ், குறும்படங்கள் போன்றவற்றை தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாலாஜி மோகன். இந்நிலையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யோகி பாபு முக்கிய […]

தமிழக லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி, சென்னை மாநகரின் கோடம்பாக்கம், கே கே நகர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் […]

ஆவெரேஜ் டீமுடன் மோதும் அவதர்ஸ் 2!!இயக்குனர் ட்வீட்..

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி  ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  வசூல் சாதனையில் முதலிடத்திலுள்ள அவதார் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “கெவினுக்கும் மற்றும் அனைத்து மார்வெல் உறுப்பினர்களுக்கும், நிஜ டைட்டானிக் கப்பலை ஒரு பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது. லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் […]

தனது ரசிகை வீட்டுக்கு திடீர் விஸிட் அடித்த பிரபல நடிகர் !!

தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, தனது ரசிகை வீட்டுக்கு திடீர் விஸிட் அடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தியா தாம்ஸ், 19 வயதாகும் இவர் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை. இவருடைய வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8:30 மணியளவில் விஜய் தேவரகொண்டா நேரடியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.  ‘டியர் காம்ரேட்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் முன்னதாக விஜய் பங்கேற்றிருந்தார். விஜய்யின் திடீர் விசிட் குறித்து பேசிய தியா, “என் கற்பனையையும் தாண்டிய விஷயம் இது. என் நண்பர்கள் […]

மீண்டும் வெள்ளத்தை சந்திக்கும் சென்னை-கோமாளி!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவி 9 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதற்கான 9 லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்திற்காக கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இது குறித்து இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், இப்படத்திற்காக சென்னை வெள்ளத்தை மீண்டும் உருவாக்கம் செய்துள்ளோம். […]

பிரபல இயக்குநருடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி…

கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குநர் ராஜேஷ் மிஸ்டர் லோக்கல் படத்தை எடுத்தார். இதில் சிவாவுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தான் இப்படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா நடித்து வெளியான […]
Page 13 of 362« First...10«1112131415 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news