Author: Inanout Cinema

பூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் “கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்”

சினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விஷயங்கள். இவற்றில் மட்டும் தான் மக்கள் வேறுபாடுகள் மற்றும் பிரிவினை மறந்து, சிறப்பான தருணங்களை கொண்டாட ஒன்றாக இணைந்து வருகிறார்கள். விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஏன, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்துகிறது என்பதற்கு இது ஒரு சரியான காரணம். இந்த சீசனில் தொடர்ச்சியாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. இது குறித்து இயக்குனர் பிரித்வி […]

ஏழை விவசாயிக்கு உதவிய நடிகர் அமிதாப் பச்சன்!!

நடிகர் அமிதாப் பச்சன் விவசாயிகளின் கடன் சுமையை ஏற்பதாக அறிவித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள 2 ஆயிரத்து 100 விவசாயிகளின் வங்கிக் கடன்களை மகள் ஸ்வேதா, மகன் அபிசேக் பச்சன் மூலம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் ஆயிரத்து 398 விவசாயிகளின் கடன் தொகையையும் மகாராஷ்ட்ராவில் 350 விவசாயிகளின் கடன் தொகையையும் அமிதாப் பச்சன் கொடுத்துள்ளார் . புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த […]

“என்னுடைய பகுதி முற்றிலும் புதுமையானது”-சுட்டுப்பிடிக்க உத்தரவு அதுல்யா ரவி

Instagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், என்னுடைய பகுதி […]

இணையதளத்தை தெறிக்க விட்ட அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’!

அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞராக அஜித்குமார் நடித்திருக்கும் இந்த படத்தை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கி இருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் முதன்முறையாக தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை […]

ஜெயம்ரவி 25-வது படத்தின் ஷூட்டிங் நடைபெறும் இடம் இதுதான் !!?

இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி 3வது திரைப்படம் நடிக்கவிருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்க சமீபத்திய சென்சேஷன் ஹீரோயின் நித்தி அகர்வால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்.20ம் தேதி முதல் குற்றாலத்தில் தொடங்கி சுமார் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் அசுதோஷ் ராணா வில்லன் […]

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா கபூர் ஆண்ட்ரியா தாரங்க் டெல்லி கணேஷ் சுஜித் சங்கர் அஸ்வின் ராவ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசை. வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி இப்படம் திரைக்கு […]

நடிகர் சங்கத்திடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்!!?

சினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், நல்லபடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், சிந்துபாத் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து இரு அணிகளாக  போட்டி போடுகின்ற ஒரு அணி மட்டும் தம்மிடம் வந்து பேசியதாக தெரிவித்தார்.  சினிமா தொழிலாளர்களின் ஊதிய […]

உலகக்கோப்பை இன்றைய தொடரின் லீக் போட்டி..!

இங்கிலாந்தின் டவுண்டன் (டௌண்டோன்) கவுண்டி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. மூன்று போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் அணி, 1-ல் வெற்றிப்பெற்றுள்ளது. அதைப்போல் ஆஸ்திரேலிய அணியும் 3 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இரண்டில் வெற்றிப்பெற்றுள்ளது. கணிக்க முடியாத அணியான பாகிஸ்தானும் பலமான அணியாக இருக்கும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும். எனினும் இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Page 11 of 336« First...«910111213 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news