Author: Inanout Cinema

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சந்தானம்!?

நடிகர் சந்தானத்திற்கு ஏ1 படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே  ‘டகால்டி’ என்ற படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் சந்தானம். இந்த படத்திற்கான ஷூட்டிங் மூன்று மாதங்களில் முடிவடைந்தவுடன் தில்லுக்கு துட்டு 3 படத்தை அதிக பட்ஜெட்டில் எடுக்க சந்தானம் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் ரசிகர் மன்ற தலைவர் எம்.கே.எஸ் குமரவேல் ஸ்ரீபெரும்புதூரில் எம்.கே.எஸ். கால் டாக்சி நிறுவனம் […]

தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற பிரபல நடிகரின் மகன்!?

நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்க, இது தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது இப்படம். இந்நிலையில் மாதவனின் மகன் தேசிய நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளாதக மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீச்சல் போட்டியில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்த மாதவனின் மகன் வேதாந்த். முன்னதாக தாய்லாந்தில் நடந்த ஃப்ரீ ஸ்டல் […]

நடிகை சமந்தா ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக நடந்து வந்தார். அலிபிரி மலைப்பாதை வழியாக சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்களும் பாதயாத்திரையாக வந்தனர். இரவு திருமலையில் தங்கிய சமந்தா, காலையில் ஏழுமலையானை தரிசித்துவிட்டுச் சென்றார்.

இயக்குநர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகினார் பாரதிராஜா…

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.  இந்நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதன் சங்கடங்களை தான் உணர்ந்துள்ளதாகவும், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்வு செய்வதற்கு வசதியாக தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மூத்த இயக்குநராக, எதிர்காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு தனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் […]

உலகக்கோப்பை தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்!?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில், விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விஜய் சங்கர் விலகியுள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படுவார் என […]

மத நம்பிக்கை காரணமாக நடிப்பை விட்டு விலகிய பாலிவுட் நடிகை !?

குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நடிகை சைரா வாசிம், தன்னுடைய சினிமா பயணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக கூறி பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். டங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த ஜாயிரா வாசிம் திரையுலகில் நடித்ததனால் தமக்கும் அல்லாவுக்குமான இடைவெளி அதிகரித்ததாகவும் தாம் அறியாமையின் பாதையில் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். பாலிவுட்டில் எல்லோரும் தம்மீது அன்பையே பொழிந்த போதும் தாம் தமது திரைப்பட வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்றும் தமக்கு கிடைத்த அடையாளம் மகிழ்ச்சியளிப்பதாக […]

இயக்குநர் விஜயின் இரண்டாவது திருமணம்!!

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய். பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், தேவி, வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவார். தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் இவர் இயக்கத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து நீண்ட நாட்களாக இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி […]

அமலாபால் ‘ஆடை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார், அமலா பாலை வைத்து  ‘ஆடை’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்போதே சர்ச்சையாக இருந்த நிலையில் டீஸர் அதற்கு அடுத்த கட்டமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அமலா பால் ஆடையின்றி நடித்துள்ள ஷாட் அந்த டீஸரில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகையும் எடுக்காத இந்த முயற்சியை அமலா பால் எடுத்திருப்பதால் பலரும் […]
Page 10 of 347« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news