இந்தியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக 7 வயது சிறுவன்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தற்போது தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் நாளை மறுதினம் [26–ந்தேதி] தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இன்னிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக 7 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளார். அரிதான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்க்கி சில்லர் (Archie schiller) என்ற சிறுவன், புதன்கிழமை தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பதே இச்சிறுவனின் ஆசை. அவரது ஆசையை அறிந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், 15 பேர் கொண்ட அணியில், 15-வது நபராக ஆர்க்கி சில்லரை இணைத்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான சில்லர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்தத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களுடன் அவர் பயிற்சியிலும் ஈடுபட்டு உள்ளார். 15-ஆவது வீரராக களம் இறக்கப்படும் சிறுவன் ஆர்க்கி களத்தில் வீரர்களுக்கு உதவும் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. சிறுவனின் ஆசையை நிறைவேற்ற ஆஸ்திரேலிய நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உடபட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news