Inandoutcinema - Tamil cinema news

மூன்றாவது முறையாக இணைந்த விஜய் – அட்லீ கூட்டணி ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

 

சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை படக்குழு நீக்கியது. நடிகை வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டு சர்க்கார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டார்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்குள் அடுத்த இன்ப அதிர்ச்சியான செய்தி தற்போது வந்துள்ளது. நடிகர் விஜயை வைத்து தேறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, மீண்டும் மூன்றாவது முறையாக விஜயுடன் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முருகதாஸ் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news