Inandoutcinema - Tamil cinema news

அரசு மரியாதையுடன்4 மணி அளவில் வாஜ்பாய் உடல் தகனம். அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும்,பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும் மற்றும் மாபெரும் அரசியல் தலைவருமானஅடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9-30 மணிக்கு வாஜ்பாய் கிருஷ்ணா மேனன் பார்க் வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாஜ்பாய் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் தலைவர்கள் வாஜ்பாயின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக தமிழக முதல்வர், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news