‘அசுரகுரு’ ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

ஏ.ராஜ்தீப் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் அசுரகுரு. இந்த படத்தில் மஹிமா நம்பியார், மனோபாலா, சுப்புராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். 

இந்நிலையில் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விக்ரம் பிரபு வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. காவல் துறை அதிகாரிகள் வங்கியில் இருக்கும் போது விக்ரம் பிரபு கொள்ளையடிப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. மறுபுறம் நாயகி மஹிமா நம்பியார் விக்ரம் பிரபுவின் வீட்டுக்கு சென்று அவர் யார் என்று தெரிந்துகொள்கிறார். 

இந்தப் படத்தின் ஹீரோவுக்கு பணத்தின் மீது ஆசை, அவர் எதற்காக பணத்தை திருடுகிறார், அதற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை. இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news