அசத்தும் ஆர்யாவின் டெடி டீசர்…இதோ!

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள படம் டெடி. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

மிருதன், டிக் டிக் டிக் என வித்தியாசமான முயற்சிகளை எடுத்த இயக்குநர் சக்தி செளந்தரராஜன், இந்தப் படத்திலும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். ஆர்யாவுடன் ஒரு டெடி பொம்மை இணைந்து அசத்தும் சாகசங்கள் தான் டெடி படத்தின் கதை. 

இந்நிலையில் தற்போது டெடி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும் போது நிச்சயம் படம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமடையும் என்று தெரிய வருகிறது. ஆர்யாவை தாண்டி டெடி ரசிகர்களை கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news