நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்!

மகாமுனி மற்றும் காப்பான் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம் டெடி. இப்படத்தில் ஆர்யா உடன் சாயிஷா மற்றும் நடிகர்கள் சதிஷ் , கருணாகரன் நடித்துள்ளனர். நாய்கள் ஜாக்கிரதை மற்றும் டிக். டிக். டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்திர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

டெடி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. படம் முடிந்த சில நாட்களிலே இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. அதில் ஆர்யா தூப்பாக்கியுடனும் அவரின் பின்னால் ஒரு டெடி பியர் பொம்மை ஒன்றும் இருப்பது போல் கலர் புல்லாக இருந்தது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்.

கடந்த காதலர் தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது டெடி படத்தின் அடுத்த பாடல் “நண்பியே” என்று மதன் கார்க்கியின் வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news