பாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி, மூடர் கூடம் நவீன் இயக்கிவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது சாஹோ.

இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இந்தப் படத்துக்கு பாக்ஸர் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெறுகிறார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன், ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் பற்றி நடிகர் அருண் விஜய் கூறியதாவது : இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது.

ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன். இந்த ஸ்கிரிப்டில் எமோஷன் மற்றும் இன்ஸ்பிரேஷன் விஷயங்கள் நிறைய உள்ளன.

அது என்னை கவர்ந்தது. வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான். இந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news