September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் வெகு சிலரே தனக்கான பாதையை வகுத்து நேர்த்தியாக பயணிக்கும் நடிகர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர்தான் நடிகர் அருள்நிதியாகும். மெய் சிலிர்க்க வைக்கும் டிமாண்டி காலனியாக இருந்தாகும் சரி, அல்லது மிகவும் புத்திக்கூர்மையான இளைஞனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மௌனகுருவாக இருந்தாலும் சரி. அருள்நிதி குறை சொல்ல முடியாத அளவுக்கு திறமைகளை வளர்த்து வருகிறார்.

இன்னிலையில் அருள்நிதி அடுத்து பரத் நீலகண்டன் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றி எஸ்பி சினிமாஸ் சங்கர் கூறியதாவது : அவரது புதுமையான கதை தேர்வில் இந்த படமும் ரசிகரகளுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் அவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதை கேட்கும் போது அவர் காட்டிய பேரார்வமும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. நல்ல தரமான கமெர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அருள்நிதியின் கதை தேர்வு பிடித்து போய், அவரின் புகழ் அதிகரித்து, அவர்களின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறார். நல்ல ஒரு பெருமைமிகு வெற்றிப் படத்தை கொடுக்கும் முனைப்பில், ஒரு தயாரிப்பாளராக மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம் என எஸ்பி சினிமாஸ் சங்கர் கூறியுள்ளார் .

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news