September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

இயக்குனராக அவதாரம் எடுக்கும் அடுத்த நடிகர்…

சென்னை: நடிகர், தொழில் அதிபர் என பன்முகங்கள் கொண்டவர் நடிகர் அரவிந்த்சாமி. நீண்ட நாட்கள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் ‘தனி ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனார்.

தொடர்ந்து கடல், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்தார். தற்போது கார்த்திக் நரகாசுரன், சதுரங்கவேட்டை 2, மணிரத்னம் இயக்கத்தில் ‘‘செக்க சிவந்த வானம்’’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அரவிந்த்சாமி விரைவில் படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகளில் அவர் ஏற்கெனவே இறங்கி விட்டதாகவும், ஸ்கிரிப்ட், படக்குழுவையும் முடிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அரவிந்த்சாமி, தற்போது நடித்து வரும் படங்களில் பிசியாக இருந்தாலும் அவை முடியும் தருவாயில் உள்ளதால். அதன்பின்னர், தான் இயக்கப்போகும் பட பணிகளை அவர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆந்து இறுதியில் அவர் புதுப்படத்தின் பணிகள் தொடங்க திட்டமிட்டுள்ளாராம். கதைக்கு ஹீரோ தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறது கோடம்பாக்கம் சினிமா வட்டாரம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news