தமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்?

கதையா, திரைக்கதையா, இயக்குனரா, தயாரிப்பாளரா, கதாநாயகர்களா ?

கதை – நானா காரணம் ?

கதையாகிய நான் அனைவரிடமும் இருக்கும் ஒருவன். உலகில் வாழும் அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் இருப்பேன். இவ்வளவு ஏன் மிருகங்கள் மொழி உங்களுக்கு புரியும் என்றால் அந்த உயிரினங்கள் கூட உங்களுக்கு கதை சொல்லும். இந்த உலகில் எட்டுதிக்கிலும் நிறைந்து இருப்பேன்.

இவ்வுலகில் அன்பு, காதல், சந்தோஷம், துக்கம், பொய், திருட்டு, கொலை, கொள்ளை, மருத்துவம், அரசியல், குடும்பம், லஞ்சம், தனிமனித ஒழுக்கம் இப்படி எதில் வேண்டுமானாலும் பல செயலாக, வரலாறாக நிகழ்வுகளாக கதையாகிய நான் மிக சுவாரசியமாக நிகழ்ந்து உள்ளேன். முந்தைய காலங்களில் நான்தான் பல இயக்குனர்களை, தயாரிபாளர்களை, கதாநாயகர்களை, வளர்த்து உள்ளேன், இப்போதும் நான்தான் சில புதுமுக கதாநாயகர்களை வளர்த்து உள்ளேன்.

திரைபடத்தின் தோல்விக்கு நான் திரைகதையை குற்றம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை ஏனென்றால் திரைகதையானது என்னுடன் சேர்த்து வளர்பவன் நாங்கள் இருவரும் உடலும் உயிரும் போல இருப்பவர்கள். ஆனால் நான் இயக்குனர், தயாரிப்பாளர், கதாநாயகன் இவர்களை குறை சொல்ல முடியும். காரணம் இவர்கள் யாரும் என்னை தேடி வரவில்லை, இவர்களின் தேடல் குறைந்து விட்டது. இன்றைய சூழலில் கதையாகிய என்னை நம்பி யாரும் கதை வடிவமைப்பது இல்லை, கதாநாயகனுக்காக கதை எழுதுகின்றனர். இப்படி இருக்க மக்கள் எப்படி அந்த திரைபடத்தை விருபுவார்.

தயாரிப்பாளர்களும் யாருக்கு கதை எழுதுற, எந்த கதாநாயகனின் உன் கையில் உள்ளார் என்றுதான் கேட்கின்றனர், உன்னிடம் நல்ல கதை உள்ளதா என ஒரு போதும் கேட்பது இல்லை, என்னை பற்றி சிறிது கூட கவலை இல்லை, வாழ்வியலாகவும், புத்தகமாகவும் நிறைந்து இருக்கும் என்னை யாரும் படிப்பதும் இல்லை வந்து பார்ப்பதும் இல்லை.

இரண்டு மணி நேர திரைபடத்தில், 5 பாடல்-25 நிமிடம், 4 சண்டை-15 நிமிடம், கதையாகிய எனக்கு சம்ந்தம் இல்லாமல் வரும் நகைச்சுவை 20 நிமிடம், கதாநாயகன் அறிமுகம், BUILD UPS SHOTS , CHASING இப்படி என 20 நிமிடம். கவர்ச்சி கதாநாயகி அறிமுகம் கதையாகிய என்னுடன் தொடர்பு கொல்லாத காதல் காட்சிகள் 15 நிமிடம். இப்படி ஆளுக்கு ஆளு இந்த இரண்டு மணி நேரத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள 25 நிமிடத்தை மட்டும்தான் கதையாகிய எனக்கு தருகின்றனர்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் சில திரைப்படங்களில் இந்த நேரத்தை கூட எனக்காக தருவதில்லை. கதையாகிய என்னை தயாரிப்பாளர்கள் வியாபாரரீதியின் பார்வையும், கதாநாயகர்களின் சுயநலமாக தன்னைபற்றியும் தன்னுடைய தற்பெருமையை எடுத்து சொல்லவும், தன்னை இளம் வயது திரையில் காமிக்கும் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதும் தான் திரைப்படம் தோல்வி அடைய முக்கியமான காரணம். இதில் பெருமளவு இயக்குனர்களை நான் பழி சொல்ல விரும்பவில்லை, சில இயக்குனர்கள் உண்மையாகவே கதையாகிய என்னை புதிய பரிமாணத்தில் காட்ட விரும்புகின்றனர்.

ஆனால் அதை தயாரிப்பாளர், கதாநாயகர்களும் ஏற்று கொள்கின்றனரா என்பது கேள்வியில்தான் முடிகிறது. பல பெரிய இயக்குனர்கள் கதையாகிய என்னை விவாதித்து திரைக்கதையும் அமைப்பது இல்லை மாறாக கதாநாயகன் திரையில் ஓடுவது, HIGH SPEED SHOTS இல் நடப்பது, அடிப்பது, வலு கட்டாயமாக பெரிய செலவில் வெளிநாடுகள் சென்று காதல் பாடல் எடுகின்றனர். சில நல்ல தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை நம்பி அதிக முதலீட்டில் படம் எடுக்க தயாராக உள்ளனர் ஆனால் அந்த பெரும் செலவில் அந்த இயக்குனர்கள் நல்ல கதை அம்சம் கொண்ட படத்தை எடுகின்றனரா இது மக்களுக்கே தெரியும்.

இங்கு அனைவரும் வெளிநாடுகளிலும், புதிய தொழில்நுட்பத்திலும் அவர்களது தேடுதல் அதிகமாக இருகின்றது ஆனால் கதையில் இதே தேடல் அவர்களிடம் இல்லை இதுதான் உண்மை. ரசிகர் கூட்டம் அதிகம் உள்ள கதாநாயர்கள் திரையில் வந்து முகம் காமித்தாள் போதும், அவர்கள் நடந்தால் போதும், நடனம் ஆடினால் போதும் என்று நினைத்து படம் தயாரிகின்றனர் அதன் விளைவு படம் படு தோல்வி ! தோல்வி ! தோல்வி !

500 கோடியில் புதிய 3D தொழில்நுட்பத்தில் எடுக்கின்ற படம் ஒரு போதும் லாபம் ஈட்டுவது இல்லை, மாறாக 2 கோடியில் எடுக்கும் நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படம் வசூலை அள்ளி தருகின்றது. இது திரை துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனாலும் மீண்டும் அதே 100 கோடிகளுக்கு மேலே செலவில் படத்தை தயாரித்து நட்டம் அடைய விரும்புகின்றனர் தயாரிப்பாளர்கள், ஒரு மாறுதலாக 100 கோடியில் எத்தனை 2 கோடி கதை அம்சம் கொண்ட திரை படத்தை நம்மால் தர முடியும் என்று கடுகளவும் யோசிப்பது இல்லை.

நல்ல திரைபடம் ஒரு மிக சிறந்த புத்தகத்திற்கு சமம் என்று நினைத்து கதை எழுதுங்கள், தேடுதலை தொடருங்கள், மக்களுக்கு திரைபடத்தின் மூலம், மகிழ்ச்சி கலந்த செய்திகளை சொல்லுங்கள். கதை நானே அனைத்திற்கும் மூலம். நாம் போடும் இன்றைய விதைதான் நாளை நமக்கு கனிகளை கொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அடுத்த கட்டுரையில் திரைகதை சொல்லும் நியாயத்தை கேட்போம்.

நன்றி.                

                          ( தொடரும் …)

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news