September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு இவர்தான் காரணம் – முத்துராஜ்

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.

இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையல் கலை இயக்குனர் முத்துராஜ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார்.

அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸாப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார் என கலை இயக்குனர் முத்துராஜ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news