அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்கள் படத்துல இருக்கு – மிலன்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதன் தமிழக விநியோக உரிமையை கேஜேஆர் ஸ்டூடியோ பெரும் விலைக்கு கைப்பற்றியது. அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10, 2019 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரைலரில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றது. அது ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லலாம். டிரெய்லரில் அஜித் அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் அழகு சேர்த்தது. இன்னிலையில் இந்த படம் குறித்து கலை இயக்குநர் மிலன் கூறியதாவது : விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது, இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன்.

போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கிய படைப்பு சுதந்திரம் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். நிச்சயமாக, ஒளிப்பதிவாளர் வெற்றியின் மாயாஜாலம் இல்லாமல் இது சாத்தியமில்லை. அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை தாண்டி சில விஷயங்களை டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். படம் வெளி வரும் போது குடும்பம் குடும்பமாக அவரை ரசிப்பார்கள் என மிலன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news