Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்க்கார். விஜய் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நோட்டிஸ். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் புகைபிடிக்கும் நடிகர் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த எச்சரிக்கை நோட்டீஸை அனுப்பியுள்ளது.

அதன்படி நடிகர் விஜய் புகைபிடிக்கும் படத்தை படக்குழு நீக்கிவிட்டது. நடிகர் விஜயின் படத்திற்கு அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகள் எழுவதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில் சர்கார் படத்தின் சர்ச்சசைக்குரிய புகைப்படத்தை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அரசுப் புற்று நோய் மருத்துவ மையத்துக்கு இழப்பீடாக வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நீருவனம், மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news