September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகி – விவரம் உள்ளே

காளி படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி கைவசம் கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன், ஆண்ட்ரு லூயிஸின் கொலைகாரன் மற்றும் இயக்குநர் நவீன் படம் என 3 படங்கள் தயாராக உள்ளது. விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படத்தின் கொலைகாரன் ஆகும்.

லீலை படத்தை இயக்கியிருந்த ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அர்ஜுன், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு அடுத்ததாக நவீன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி.

நவீன் இயக்கவிருக்கும் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. இதனை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி பட புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news