Inandoutcinema - Tamil cinema news

மித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படங்களைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. sk15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனைவருமே இரும்புத்திரை படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இதில் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுனையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். மித்ரன் இயக்கவிருக்கும் sk15 படத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news