சமரச முடிவு குறித்து சற்று முன்பு காணொளி வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – காணொளி உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார்.

முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இன்னிலையில் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரும் வந்திருந்தனர்.

இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் பட தயாரிப்பு நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார். சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரனின் பெயர் போடவும் பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததால், பிரச்சினை சுமுகமாக முடிந்தது.

அதன்படி, டைட்டிலில் வருண் ராஜேந்திரன் பெயர் இடம் பெறுவதோடு, 30 லட்ச ரூபாய் இழப்பீடும் தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், அவர் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், வழக்கம்போல நிறைய வதந்திகள் இஷ்டத்துக்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கம் இது. மதிப்பிற்குரிய பாக்யராஜ் சார் வந்து, இதுமாதிரி பிரச்சினை போய்கிட்டு இருக்கு’ என்றார்.

ஒருவனுடைய ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள் என்று வருண் ராஜேந்திரன் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கருவை வைத்துக் கதை எழுதியிருக்கிறார். அது ஒரு சின்ன பொறி. மற்றபடி அந்தக் கதைக்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், நமக்கு முன்னாடியே ஒரு உதவி இயக்குநர் இதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதற்காக, அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று பாக்யராஜ் சொன்னார்.

சரி என்று நானும் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையவே கிடையாது. அனைவருக்கும் தீபாவளி தீபாவளி நல்வாழ்த்துகள் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news