மீண்டும் விஜய்யை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் விஜய். இந்த மூன்று படங்களுமே அவருக்கு வெற்றியாக அமைந்தன. இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கிய முருகதாஸ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக தர்பார் வெளியான நேரத்தில் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் அதை ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் விஜய்யை சுதா இயக்கவில்லை என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம், மீண்டும் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் இணைய இருக்கிறார்களாம். அப்படம் துப்பாக்கி-2 என்றும் கூறப்படுகிறது. இந்த கதையை ஏற்கனவே விஜய்யிடம் முருகதாஸ் கூறி ஓகே பண்ணி வைத்திருப்பதால், விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news