மாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு ?

சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு.

வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் இந்தப் படத்துக்காகத் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள இருக்கிறார் சிம்பு. இதற்காக 28 நாட்கள் பாங்காக்கில் தங்கியிருந்து, கற்றுக்கொள்ள இருக்கிறார். மாநாடு படத்தில், சிம்பு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கலாம் எனத் கூறப்பட்டது.

ஆனால் தற்போது அவருக்கு பதில் அணு இம்மானுவேல் நடிப்பதாக கூறப்படுகிறது. ராசி கண்ணா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருவதால் சிறிது இடைவெளிவிட்டு நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும், அது வரை தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் நெருங்கிய திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news