September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினிக்கு அடுத்து கமலா ? அனிருத்தின் அதிரடி திட்டம். விவரம் உள்ளே

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் தான்இந்தியன். இதில் அரசு அதிகாரிகள் செய்யும் தவறையும் அதனால் பாதிக்கப்படும் சாமானியன் வாழ்க்கையும் ரொம்ப எதார்த்தமாக சொல்லியிருப்பார் சங்கர்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தட்டி கேட்கும் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருப்பார். இந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரம் திரை ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்றதாகும். கிட்டதட்ட 22 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

இதை இயக்குனர் சங்கரும், நடிகர் கமலும் கடந்த வருடமே உறுதிபடுத்திய நிலையில் இப்படத்தை பற்றி மற்றொரு தகவல் கசிந்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிந்த பிறகு இந்தியன் 2 படத்திற்கான படபிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் கமலஹாசனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளிவந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ஏற்கனவே கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news