ஹரிஸ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு குறித்த அனுபவங்களை நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் கூறியிருந்தார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த காதல் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் ஜோடியாக நடிக்க, நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பால சரவணன் காமெடியில் கலக்குகிறார்கள். இந்த அழகான காதல் கதையை புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்திருக்கிறார். இன்னிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சிலரில் அனிருதும் ஒருவர்.

அவர் தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள் இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்காக கண்ணம்மா என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news