September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

அண்டாவ காணோம்’ : நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்மையான நகைச்சுவை படம்

சென்னை: 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் குடும்பபடங்கள், காமெடிபடங்கள் அதிகம் வெளிவந்தன. பின்னர், பேய்படம், ஹீரோயிசம் படங்கள்,   ரவுடி படங்கள் என படங்களின் ஜானர்கள் மாறிவிட்டன.

 

தற்போது அது போன்று குடும்பத்துடன் சென்று பார்க்கும் படங்கள் அறிதாகிவிட்டன. இந்த ஏதிர்பார்ப்பை ’அண்டாவ காணோம்’ திரைப்படம் நிவர்த்தி செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது.

இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவது தான். அதன்படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில் , ஜூன் மாதம் 29ம் தேதி வெளி வர இருக்கும் “அண்டாவகாணோம்” என் கூற்றை நிரூபிக்கும்.

நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்ககூடிய நேர்மையான நகைச்சுவை படம்.

இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கபடும் படங்கள், “அண்டாவ காணோம்” போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளி வரும் பட்சத்தில் இருட்டில் கரைந்துவிடும்” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஜே.எஸ்.பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் ஜே.சதீஷ் குமார் தயாரிக்கிறார். முதுமுக இயக்குனர் வடிவேல் இயக்குகிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news