September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர். தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்களை கையில் வைத்துள்ளார். இதில் ஜூங்கா இவ்வாரம் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரங்கள் டிவி சானல்கள், இணையதளங்கள் என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அவர் தற்போது பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிரார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அண்மையில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து படக்குழுவுடன் அவர் மலேசியா செல்லவுள்ளாராம். அங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது. இதில் அவரின் மகன் சூர்யாவும் நடிக்கவுள்ளதால் உடன் அவரும் சென்றுள்ளாராம்.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படம் தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது. யுவன் இசையமைக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news