இயக்குனர் சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன் – அமலா பால்

இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு லீனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை அமலா பால் லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை அமலா பால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது : நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.

நான் அவர் இயக்கிய திருட்டுப் பயலே 2 படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் உடைய பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடல் ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன்.

அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. இது போன்று பாலியல் தொல்லைகள் அனைத்து தொழில் துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது என நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news