Inandoutcinema - Tamil cinema news

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை அமலா பால் – புகைப்படம் உள்ளே

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால் ஆகும். இந்த படம் அவருக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது.

இன்னிலையில் அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில், அதோ அந்த பறவை போல என்னும் படத்தில் அமலா பால் நடித்துவருகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே உள்ளன. அவ்வாறு ஸ்டன்ட் காட்சியில் அவர் கையை வேகமாகச் சுழற்றிய போது, தசைநார்களில் காயம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் அதை சுளுக்கு என நினைத்த படக்குழு, அவருக்கு ஐஸ் ஒத்தடம்கொடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறது. ஆனால் வலி அதிகமானவுடனே, அந்தக் காட்சியை மட்டும் பிறகு எடுத்துக்கொள்ளலாம் எனத் தள்ளிவைத்துவிட்டு, அவர் கையை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் மற்ற காட்சிகளை எடுத்தனர்.

பிறகு, சிகிச்சைக்காக கொச்சி சென்றுள்ள அவர், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. அமலா பால் இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீதமுள்ள காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகையில், அவர் தன்னை தானே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news