Inandoutcinema - Tamil cinema news

எட்டு வருடம் கழித்து பிரபல நடிகருடன் இணைந்த ஐஸ்வர்யா ராய் – விவரம் உள்ளே

தமிழ் மற்றும் இந்தி மொழியில் மணிரத்னம் இயக்கத்தில் 2007ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் குரு ஆகும். குரு படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர்.

இந்த படம் வசூல் ரீதியகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குரு படப்பிடிப்பில்தான் அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராயுக்கும் காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ராவணன் என்ற பெயரிலும் இந்தியில் ராவண் என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 2010–ல் வெளிவந்தது.

அதன்பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் குளோப் ஜாமுன் என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் இயக்குகிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் குளோப் ஜாமுன் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news