இயற்கையே நமது ஆதாரம் – சுற்றுச்சூழல் சீர்கேடு

இயற்க்கை-2

உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையானது காற்று. நாம் அனைவரும் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் விரும்புவோம். ஆனால் நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா? பெருகிவரும் மக்கள் தொகை, வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என உலகமே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடத்திய சோதனையில் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் அரசாங்கத்தால் எடுக்கப்படுகிறது. இருப்பினும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. வெறும் அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் நாம் எப்படி மாசுபாட்டை குறைக்கப்போகிறோம்!?. சற்று சிந்திக்கவேண்டிய விசாயம்!

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் நம் தலைமுறை மட்டும் அல்ல எதிர்வரும் தலைமுறையையும் சேர்த்து பாதிக்கும். தற்போது கூறிய தவளின் படி இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் கற்று மாசுபடுகிறது என்கின்றனர் ஆய்வாளர் கள். சீனாவில் பாட்டிலில் அடைக்கப்ப ட்ட சுத்தமான காற்றை பணம் கொடுத்து வாங்கி சுவாசித்து கொண்டிருக்கிறார் கள். இனியும் நம் விழித்துக் கொள்ள வில்லையென்றால் நம் நாட்டிலும் சுத்தமான காற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நாள் வரும்.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் உலகிலேயே அதிக மாசடைந்த முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்த்து. அதேபோல் மாசடைந்த முதல் 10 நகரங்களில் முதல் 9 நகரங்களும் இந்திய நகரங்கள்தான். குறிப்பிட நகரங்களில் ஆண்டிற்கு சராசரி மாசு அளவு 2.5PM ஆக இருப்பதாகவும். இது மிகவும் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news