Inandoutcinema - Tamil cinema news

மரபு விதை போராளி நெல் ஜெயராமன் காலமானார் – சோகத்தில் மூழ்கிய இணைய உலகம்

சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறை பூண்டி, காட்டிமேடு என்ற கிராமத்தில் 1968ம் ஆண்டு பிறந்தவர் ஜெயராமன் (51), விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பாரமரிய விவசாய முறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயராமன், அழிந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க போராடிய நம்மாழ்வாரிடம் மாணவராக இருந்தார். அவரிடம் விவசாயம்,  பாரம்பரிய நெல் முறைகளை மீட்டெடுக்கும் முறையை கற்றுகொண்டு தொடர்ந்து வழக்கொழிப்பு செய்யப்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் வகைகளை கடந்த 22 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துகொண்டு மீட்டெடுத்தார்.

அதுமட்டுமின்றி, தான் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் வகைகளை மற்ற விவசாயிகளுக்கும் வழங்க கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி 12 ஆண்டுகளாக  நெல் திருவிழா நடத்தி வந்தார். தமிழகம் மட்டுமின்றி, கேரளா, தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் இயற்கை விவசாய முறையை நடைமுறைப்படுத்தினார். சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாய முறைக்கு மாற்றச்செய்தார். இவரின் இந்த சேவைக்காக கடந்த 2011ம் ஆண்டு மாநில விருந்தும், கடந்த 2015ம் ஆண்டு இந்திய தேசிய விருந்தும் பெற்றார்.

இதற்கிடையில், நெல் ஜெயராமன் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை நடிகர்கள் சதியராஜ், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் சந்தித்து உதவிகள் செய்து வந்தனர். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் நெல் ஜெயராமன் என்று அழைக்கப்பட்ட ஜெயராமன் காலமானார்.

நெல் ஜெயராமன் இறந்த செய்தியை சமூகவலைத்தளக்களில் பார்த்து சென்னையில் உள்ள அவரது இல்லதிற்கு நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் இணைய உலகில் நெல் ஜெயராமனின் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news