September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

அமிதாப் படத்தில் நடிக்கும் தல அஜித், இசை யுவன் – அடடே

சென்னை: அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படபிடிப்புக்காக படக்குழுவினர் இன்று ஹைதிராபாத் செல்கின்றனர். அங்கு ஒரு மாதம் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

“விஸ்வாசம்” படம் முடிந்த கையுடன் தல அஜித் அடுத்து “சதுரங்கவேட்டை” இயக்குனர் H.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இது, ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்துக்கு யுனர் இசை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தல – யுவன் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இதற்கு பல நல்ல உதாரனங்கள் இருந்தாலும் பில்லா (2007) மற்றும் மங்காத்தா2011) ஆகிய படங்களே போதும்.

மற்ற நடிகர், நடிகைகள், தொழிற்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை. படபிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடைசியாக அஜித்துக்கு ஆரம்பம் (2013) படத்தில் இசை அமைத்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் வினோத் – அஜித் கூட்டணியில் உருவாக்கும் படத்துக்கு யூவன் இசை அமைப்பது தல ரசிகர்களுக்கு விருந்தாக அமைக போகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news