வரலட்சுமியை தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வந்த மற்றொரு நடிகை – விவரம் உள்ளே

சென்னை: சினிமாவில் பிசியாக நடித்து வரும்  பல நடிகர், நடிகைகள் மார்கெட் குறைந்ததும் டிவி சிரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் வருவது வழக்கம். ஆனால் இப்போது தொலைக்காட்சிகளில் பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சர்வ சாதாரனமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூரியா விஜய் டீவியில் “கோடிஸ்வரன்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் சன் டிவியில் “நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதேபோன்று நடிகை வரலட்சுமியும் ஜெயா டீவியில் “உணனை அறிந்தால்” என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை சுருதிஹாசன் சன் டீவியில் “ஹலோ சகோ” என்ற மாறுபட்ட நிகழ்ச்சி மூலம் டீவிக்கு வரவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது டிவிட்டரில் தீயாய் பரவி வருகிறது. இதனை சுருதியின் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news