ஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – விவரம் உள்ளே

ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடித்துள்ள அடங்க மறு, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V. சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அடங்க மறு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news